Sunday, November 4, 2018

காட்சியும் சொல்லும்


காவியம் சுசித்ரா

புரிந்துகொள்ளமுடியாத தருணங்களை காட்சிப்படுத்துவது காவியம். என்ற வரியை வெண்முரசு பற்றி சுசித்ரா எழுதிய கடிதத்தில் வாசித்தேன். இதை நானும் யோசித்திருக்கிறேன். நிறைய இடங்களை வெண்முரசு வெறுமே காட்டிவிட்டுச் செல்கிறது. அது என்ன, எதைக்குறிக்கிறது என்பது கோடிகாட்டப்படுகிறதே ஒழிய அதற்குப்பின்னாலுள்ள உளவியல் விஷயங்கள் நேரடியாகப் பேசப்படுவதில்லை. நேரடியாகப்பேசுவதென்பது காவியத்தின் அழகியலுக்குச் சரிப்பட்டு வராதோ என்று நான் நினைத்துக்கொண்டேன். வெறுமே காட்சியாகவே காட்டிவிட்டுச் செல்லும் இடங்கள் அவற்றின் அழகு காரணமாகவே ஆழமாகப்புரிந்துகொள்ளப்படாமல் போகின்றனவா என்னும் எண்ணமும் ஏற்படுகிறது

மகாதேவன்