Monday, March 11, 2019

போருக்கு முன்



அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் மைந்தர் பலி பற்றி எழுதியிருந்தார். இந்தப்போர் தொடங்குவதற்கான முஸ்தீபுகள் மட்டும் மூன்று நாவல்களாக வந்தன. போரை சமரசம் செய்வதற்கான முயற்சிகள். போரை நிறுத்துவதற்கான முயற்சிகள். எல்லாம் முடிந்துதான் இந்தப்போர். இப்போது போரை பார்க்கையில்தான் அந்த முயற்சிகளின் முக்கியத்துவம் எமக்கே தெரியவருகிறது.  அப்போது கொஞ்சம் நீட்டிமுழக்கிவிட்டார் என்று தோன்றியது. ஆனால் இப்போது அந்த இடங்கள் எல்லாமே பெரிதாகிவிட்டனா

ஏன் பெண்கள் எல்லாம் அத்தனை ஆவேசமாக எதிர்த்தார்கள் என்பதும் ஏன் போருக்கான சமரசங்கள் எல்லாம் இளைய மைந்தர்களின் பார்வை வழியாகவே சொல்லப்பட்டன என்பதும் இப்போது படிப்படியாகத் தெளிவடைகின்றன. ஏனென்றால் போரால் இழப்பு அவர்களுக்குத்தான். இன்று முந்தைய ஒவ்வொரு பகுதியும் ஆழமான அர்த்தங்களை அளிக்கின்றன


அருண் சிவபாலன்