Saturday, March 23, 2019

கார்கடலின் மொத்தம்



ஜெ

வழக்கம்போல கார்கடல் கச்சிதமான வடிவில் முடிந்துவிட்டது. நான்கு கதைசொல்லிகள். அல்லது மூன்றுகதைசொல்லிகள். ஒரு கதைசொல்லிக்குள் இரண்டு கதைசொல்லிகள். சஞ்சயன் கண் வழியாகவே ஏகாக்ஷர் பார்க்கிறார். அவர்களின் கதைகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அரவான் சொல்லும்கதைகளில் நாகங்கள் அதிகமாக உள்ளன. மிஸ்டிக் எலிமெண்ட் ஓங்கியிருக்கிறது. பல இடங்களில் அது எவர் சொல்லும் கதை என்பது சொல்லப்படவில்லை. கதாபாத்திரங்களே நேரடியாகக் காட்டப்படுகின்றன. ஆனால் அது எவர்சொல்லும் கதை என்பதை ஊகிக்கமுடிகிறது. இந்த அமைப்புதான் போரில் அணு ஆயுதம்போன்ற ஒரு அம்புவரை பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சித்தரிக்க வசதியாக உள்ளது. இந்த நாவல் முழுக்கவே குரு- மாணவன் உறவின் பல தளங்கள் வந்துகொண்டே இருந்தன. கடைசியாக துரோணருக்கும் அர்ஜுனனுக்குமான உறவும் அதன் உச்சமான போரும் இந்நாவலை முழுமையடையச்செய்கின்றன. துரோணரைப் புரிந்துகொள்ள நாவலை முழுமையாகத்தான் வாசிக்கவேண்டும். பல படிகள் உள்ளன. அவர் அர்ஜுனனின் சாயல் இருப்பதனால்தான் அபிமனியூவை கொல்கிறார். அர்ஜுனனை அவரால் கொல்ல முடியவில்லை. அவருடைய தத்தளிப்பு நாவல் முழுக்க வந்துகொண்டே இருக்கிறது.

ராஜசேகர்