Monday, March 11, 2019

மண்டையனுக்கு அஞ்சலி

அன்பின் ஜெ,


நேற்று இந்த காணொளி பார்த்தேன்நாய்குட்டிகளும் குழந்தைகளும். சிறந்த கூட்டு இல்லையாபூரணமகிழ்ச்சியன்றி வேறில்லைநாம் நாய்களுடன் உரையாடுகிறோம்விளையாடுகிறோம்ஆனால் ஓர்எல்லைவரைதான்குழந்தைகளே நாய்களுக்கான தகுதிவாய்ந்த விளையாட்டுத் தோழனாக இருக்கமுடியும் என நினைக்கிறேன்.

உபகெளரவர்:

இந்தத் திரளை பார்க்கும்போது எனக்கு இயல்பாக நினைவுக்கு வந்தது உபகெளரவர்கள் தான்எப்போதும்மகிழ்ச்சியான ஒற்றைத் திரளாக அன்றி அவர்களை நினைவுகூர முடிந்ததில்லைஇந்த போருக்கு பின்பும்கூடதிரளென்றிருப்பதின் இன்பம்காரணமற்ற மகிழ்ச்சியின் இன்பம்இவர்கள் அளிக்கும் தரிசனம்ஒன்றேதூய மகிழ்ச்சி காரணமற்றதாகவே இருக்க இயலும் என்பதே.

ஒருவகையில் இவர்கள் நம்மை துனுக்குற செய்கிறார்கள்நாம் கலைசிந்தனை என அடையும் மகிழ்ச்சிஉண்மையில் மகிழ்ச்சிதானா என்றே யோசனை வந்து விடுகிறதுஅல்லது இப்படி சொல்லி பார்க்கிறேன்.நாம் cereberal ஆக அடையும் மகிழ்ச்சி என்பது இத்தகைய காரணமற்ற மகிழ்ச்சியைவிட ஒருபடிகீழானதாகவே இருக்க இயலும்.
                                                                                                                            

கடோத்கஜன்:

போரில் இறப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் நம்மை பாதிக்கும் இறப்புகள் இப்போரின் அரசியலுக்கோ தனிப்பட்ட குடிவஞ்சங்களுக்கோ வெளியே உள்ளவர்களின் இறப்புகள்தான். உலூபி மைந்தன் அரவான் முதல் சாத்யகி மைந்தன் சினி வரை. அங்காரகன் மீதேறி வரும் மூத்த பால்ஹிகர் முதல் பால்ஹிகபுரியின் பூரி வரை. இந்த நிரையில் கடைசியாக வந்து சேர்ந்திருப்பவன் கடோத்கஜன்.

கடோத்கஜனும் இப்போர்களத்தில் எவர்மீதும் வஞ்சம் கொண்டவனல்ல. இன்னும்சொல்ல போனால் இப்போருக்கு எதிரான மனநிலை கொண்டவன். இதுவரை இப்போர் அரசியலுக்கு வெளியிலிருந்து உயிர்விட்டவர்கள் ஒருவகை அப்பாவிகள். ஆனால் கடோத்கஜன் அப்பாவியும் அல்ல. காலம் கடந்து நோக்கும் எண்ணநுண்மை கொண்டவன். அறம் குறித்தும் அரசு குறித்தும் அவனுக்கென்று பார்வை உள்ளது. அரசன் இத்தனை ஆடைகளுடன் இருக்கலாகாது என எண்னுகிறான். எனவேதான் இவனது இறப்பு மேலும் அழுத்தம் கொண்டதாகிறது.

மேலும் நான் வாசித்தவரையில் இளைய யாதவருக்கு எதிராக உரைக்கப்பட்ட சொற்களில் முதன்மையானது கடோத்கஜனுடையதுதான். தந்தையேஎவருடைய சொல்லும் மானுடரின் அழிவுக்குநிகரானதல்லசொல்லுக்காக மானுடர் சாவதைப்போல் வீண்செயல் வேறில்லை” என்றான் கடோத்கஜன். 
இருப்பினும் தந்தைக்காக போரிடுகிறான். போரிடுவது குறித்த எந்த அறக்குழப்பங்களும் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளத்தால் அகன்றிருப்பதாலேயே பெருவீரர்கள் ஆனவர்கள் கடோத்கஜனும் பீமனும்.

கடோத்கஜன் இறப்புக்கு பிறகு மீண்டும் சிறுவனாக மாறி இந்த உபகெளரவர் திரளில் இணைத்து கொண்டது நிறைவளித்தது. அவன் இயல்பாக இருக்ககூடிய இடம் அங்குதான். ஒருவகையில் அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தெய்வங்கள் செய்யும் பிழையீடு.

மண்டையன் வெண்முரசில் உருவான ஒரு பெருநிகழ்வு. அவனுக்கு அஞ்சலி.

தே.அ.பாரி
Attachments area