Friday, March 22, 2019

நாராயணம்



ஜெ

அஸ்வத்தாமன் சீற்றம்கொண்டு வருவதும் அவன் கொண்டு வரும் அம்பின் வர்ணனைகளும் எல்லாம் ஒருவகையில் அணுகுண்டை ஒத்திருக்கின்றன. அந்த வர்ணனையை இங்கே அரவானின் குரலில் சொல்லவேண்டும் என தெரிகிறது. இங்கே கதை கதைசொல்லிகளால் சொல்லப்படுவதனால் இந்தச் சுதந்திரம் உள்ளது. அந்த குண்டு - அல்லது அம்பு- என்ன என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

அஸ்வத்தாமனின் நாராயணாஸ்திரம் அலையம்பு ஆழியம்பு என்று பல்வேறு வடிவில் சொல்லப்படுகிறது. நாராயணாஸ்திரம் என்பது நாராய்ணனாகிய விஷ்ணுவின் அம்பு என்பார்கள். நீஙள் அதை நாராயணம் என்றால் நீரில் தோன்றியது என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

சாந்தகுமார்