Saturday, June 8, 2019

கண்ணனின் காண்டீபம்



இனிய ஜெயம் 


இப்படி ஒன்றை காண்பேன் என எண்ணவே இல்லை.

//காண்டீபம் சண்டிக்குதிரை என நின்று துள்ள அதன் நாண் தழைந்து கிடந்தது. அதில் ஓர் அம்பை ஏவும் விசைகூடுமா என அவன் ஐயம் கொண்டான். “யாதவரே, என் வில்…” என்று கூவினான். “ஏவுக! இக்கணமே அம்பை ஏவுக!” என அவன் தேரின் அத்தனை ஒளிவளைவுகளிலும் தோன்றி இளைய யாதவர் ஆணையிட்டார். அவன் கை சென்று அம்பறாத்தூணியில் தொட்டதுமே அஞ்சலிகம் பாய்ந்து விரல்களில் ஏறிக்கொண்டது. அதுவே காண்டீபத்திலமர்ந்தது. நாணை இழுத்து தன்னை இறுக்கிக் கொண்டது. வீறிட்டலறும் ஒலியுடன் எழுந்து மின்னல் என ஒளிவீசியபடி கர்ணனை நோக்கிச் சென்று அவன் நெஞ்சைத் தாக்கியது.//

 ''யாதவரே என் வில்'' என குழைந்து தடுமாறுகிறான் பார்த்தன். 

அஞ்சாதே பார்த்தா  அது உனது அல்ல எனது  வில் என காட்டிவிட்டான் நீலன். 

''அவர் படைக்கலமில்லாமல் இருக்கிறார்''

அர்ஜுனன் தயக்கம் நியாமானது. 

படைக்லம் அற்றவனாகத்தானே நீலனும் அங்கே அமர்ந்திருக்கிறான்.  :)

நீலன் காண்டீபத்துக்கு ஆணையிட்டுவிட்டான்   அஞ்சலிகா அஸ்திரத்தை நீலன் பார்த்தனுக்கு அளிக்கவில்லை. அவன் அளித்தது காண்டீபத்துக்கு.  தடுமாற்றமெல்லாம் பார்த்தனுக்கு மட்டுமே. காண்டீபத்துக்கு அல்ல.  

நீலன் சொல் நிலைபெற, பார்தனைக் கருவியாக்கி அஸ்திரத்தை ஏவி விட்டது காண்டீபம். 

அர்ஜுனன் முற்றிலும் நிர்வாணியாக நின்று அவன் அடைந்த உச்சபட்ச ஞானம் இதுவாகவே இருக்கும். காண்டீபம் அவன் கை ஆயுதம் அல்ல. அவன்தான் காண்டீபத்தின் வேலையாள்.