Tuesday, June 25, 2019

காவியம்



ஜெ


காவியத்தின் தன்மை பற்றிய விவாதத்தை இந்தத் தளத்திலே வாசித்தேன். நானும் நண்பர்களுடன் வாட்ஸப் குரூப்பில் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். காவியம் ஏன் மெல்லமெல்ல செல்கிறது என்றால் மிகவிரிவான வர்ணனைகளுக்காக. [அதேசமயம் சில இடங்களில் அது குதிரைபோல பாயும். சில இடங்களில் துப்பறியும் கதைபோலவும் ஆகும். சில இடங்களில் நாடகத்தன்மையையும் கொள்ளும்]

இந்த வர்ணனைகள் எதற்காக? வர்ணனைகள் இடத்தை கண்முன் காட்டுகின்றன. ஆனால் காவியத்தின் நோக்கம் அது மட்டும் அல்ல. காவியம் வர்ணனைகளை அப்படியே கவித்துவக்குறியீடுகளாக ஆக்கிக் காட்டுகிறது. உதாரணமாக குருஷேத்திரத்திற்குள் எப்படி பாதைகள் அமைக்கப்படுகின்றன என்பதை நாம் செந்நாவேங்கை முதல் பார்த்தோம். அந்தப்பாதைகள் எரிபரந்தெடுத்தலில் அப்படியே கருகி கரியாலான பாதையாக ஆகிவிட்டிருப்பதை இருட்கனியின் இறுதியில் பார்க்கிறோம். பாதைகள் இல்லாத இருள் என்ற அர்த்தம் அங்கேதான் வருகிறது. பாதை கருகுவது என்பதே அற்புதமான ஒரு போயட்டிக் இமேஜ் ஆக உள்ளது

வெண்முரசின் எல்லா வர்ணனைகளையும் இப்படி நம்மால் விரிவாகச் சொல்லிக்கொண்டே போகமுடியும். அவைஎல்லாமே வர்ணனைகள் அல்ல. கவித்துவ உருவகங்கள்


சாரதி.