Sunday, June 9, 2019

கொடை




அன்புள்ள ஜெ

இருட்கனி முடியப்போகிறது. இந்நாவலுக்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. இது கர்ணனின் கொடையைப்பற்றிப் பேசுகிறது. கர்ணனின் இக்கட்டுகளும் துயரங்களும் வெய்யோனில் வந்தன. அவன் கொடையாளி என்ற சித்திரம் அதில் வரவில்லை. இது முழுக்கமுழுக்க கர்ணன் என்னும் கொடையாளியைப்பற்றி மட்டுமே பேசும் நாவல்.

‘கர்ணன் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். குந்திக்கு அவன் தன் முதல்கொடையை அளிக்கிறான். தன் படகை தானே தட்டிவிட்டு அவளை விடுவிக்கிறான். ராதைக்கும் அதிரதனுக்கும் அடுத்த கொடை. துரியோதனனுக்கும் அவன் அந்த மணிமுடியை கொடையாக அளிக்கிறான். அவன் குந்தியை அன்னை என்று சொல்ல மறுப்பதே துரியோதனனுக்காகத்தான். அப்படி அவனுடைய கொடைகள் செல்கின்றன. இறுதியாக பரசுராமருக்கும் கொடைஅளிக்கிறான். அவருடைய சொல் பொய்யாகக் கூடாது என நினைவுவந்த மந்திரத்தை வேண்டுமென்றே மறுக்கிறான்

அவன் சூரியனின் மகன் ஆகவே கொடையளித்தே ஆகவேண்டும். அவனுக்கு எவரும் எதுவும் கொடுக்கமுடியாது. அவன் பெற்றுக்கொள்ளாமலேயே விண்ணுலகம் செல்கிறான்

ஆர்.பாஸ்கர்.