ஜெ
இந்திரநீலத்தில்
சியமந்தகத்தின் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். இந்திரநீலம் என்று வர்ணிக்கப்படும்
சியமந்தகம் என்பது கிருஷ்ணனின் மாயை. பொன்னென்றும் பொருளென்று அரசென்று அவன் மாயம்
காட்டி விளையாடுகிறான். அந்த விளையாட்டுக்கு அக்ரூரர்கூட தப்பவில்லை. சாத்யகியும் தப்பவில்லை.
ஏழு மனைவிகளும் தப்பவில்லை. அதை விட்டு விலகியவள் என காட்டப்படுபவள் காளிந்தி மட்டுமே.
ஆனால் ஜாம்பவான்
அதிலிருந்து விலகியவராகவே காட்டப்படுகிறார். அந்த மணியை அவரது குலம் பிள்ளைகள் வைத்து
விளையாடத்தான் கொடுத்தது. அதை ஒரு விளையாட்டுப்பொருளாகவே தன் மகளுக்கு அவர் அளித்தார்.
அந்த அர்த்தம் ஆச்சரியமாக இருந்தது
சாரங்கன்