Saturday, March 19, 2016

இந்திரநீலம் பொருள்






அன்புள்ள ஜெ

இந்திரநீலம் நாவலை இப்போது மீண்டும் வாசித்தேன். முதலில் வாசிக்கையில் கிருஷ்ணனின் எட்டு மனைவியர் என்னும் பொருளில் மட்டுமே வாசித்தேன். எட்டு நிலைகள் என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ளமுடிந்தது. திருசூழ்பெருநிலை என்னும் சொல்லாட்சி நாக்கிலேயே தங்கிவிட்டது. எத்தனைமுறை அதை நானே சொல்லிக்கொண்டிருப்பேன் என்பது தெரியவில்லை. இந்நாவல்களின் அழகு இவற்றிலுள்ள மொழி தான் என்று நினைக்கிறேன்

உச்சம் என்பது செவிலியன்னை தன் மகளின்பொருட்டு அடையும் அந்த பிரிவாற்றாமையும் அதன் இறுதியில் அவளுக்கு மகன் உருவில் கிருஷ்ணன் வருவதும்தான்

நீலம்தான் உச்சம் என்று இதுவரை நினைத்திருந்தேன். இந்திரநீலம் அதன் விரிவான வடிவம் என இப்போது புரிகிறது

ஜெயராமன்