அன்புள்ள ஜெ
நாகர்களுக்குள்
ஒற்றுமை இல்லை. அதைப்பயன்படுத்தி அவர்களை ஷத்ரியர்கள் அழிக்கிறார்கள். ஆனால் ஷத்ரியர்களுக்குள்
அந்த வெற்றியை எவர் தலைமைதாங்கி அனுபவிப்பது என்ற வகையில் பெரிய பூசல். அவர்களும் சண்டையிட்டு
அழிகிறார்கள். அற்புதமான ஒரு வரலாற்றுச்சித்திரம்
ஆனால் இதே சித்திரம்தானே
உலகப்போர்கள். காலனியாதிக்க நாடுகளை சுரண்டி, அங்குள்ள தொல்குடிகளை அழித்த ஐரோப்பியநாடுகள்
தங்களுக்குள் சண்டை போட்டு அழிந்தனர். பிரிட்டன் தான் இந்திரப்பிரஸ்தம், ஆஸ்திரேலிய
பழங்குடிகள் நாகர்கள். உலகப்போர்தான் மாபாரத போர். என்ன மிஞ்சியது பிரிட்டனுக்கு? ஒன்றுமே
இல்லை
செம்மணி அருணாச்சலம்