Tuesday, March 8, 2016

உள்ளிருக்கும் பூதங்கள்



ஆமாம். மயனின் மாளிகையில் மாயங்கள் என்பது அவர்களின் ஆழ்மனம்  அறிந்ததுதான். அங்கே யாரும் படம் காட்டவில்லை. அந்த யவன மது அருந்தியதால் தோன்றியது.

துச்சாதனனிடம் சகுனி மழைப்படாலிலேயே சொல்லிவிடுகிறான் துரியனின் தலையை உடைக்கபோவது பீமன் என்பதை. அதன்பிறகே அவன் விஷமளித்து ஆற்றில் தள்ளுகிறான்.  துரியனுக்கு இணை இன்னொருவர் என சுஜயன் சொல்லும்போதும் கர்ணனின் அதிர்ச்சியும் பின் அவன் ஜராசந்தன் என சமாளித்ததையும் பார்த்தோம். இவர்களுக்கிடையேயான பனிப்போரை இருவரும் அறிந்தே இருக்கிறார்கள் ஆனால் ஒப்புக்கொள்ள தயக்கம். அதை அன்பு என முகமூடி போட்டு வந்து நிற்கிறான் துரியன். ஆனால் ஏதாவது ஒரு கரடி வந்து அவனை மீண்டும் ஸ்தூலகரணனாக்கி விடுகிறது.

திரெளபதியின் புன்னகை என்பது இந்த காட்சியில்  ஒரு காரணம்.  இவர்களாக நினைத்துக்கொண்டு தன்னை அவமதித்துக்கொள்வது. அதற்கு காரணம் இந்த மாளிகை அவளின் அகங்காரத்தின் வெளிப்பாடு என்பது. எங்கும் திரெளபதி நேரிடையாக  துரியோதணனை அவமதிக்கவில்லை என்பதே சக்கரவர்த்தினியாக அவள் இடம். அவள் பாண்டவர்களை வைத்து ஆடிய ஆட்டம் இது

காளிப்பிரசாத்