ஜெ
அடுத்தநாவலை
எழுத ஆரம்பித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசிப்பதனால்
ஒருவகையான மனநிலை அமைந்திருக்கிறது. நடுவே வேறு எதையாவது வாசிக்கலாமென்று தொடங்கினேன்.
சாதாரணமாக வந்தான் போனான் என்று கதைவாசிக்க மனம் ஒப்பவில்லை. அதில் ஏதேனும் ஒரு உளவியல்
நுட்பம் இருக்கவேண்டும். அல்லது வர்ணனை நுட்பம் இருக்கவேண்டும். அல்லது ஏதாவது மொழியழகு
இருக்கவேண்டும் என்று தோன்றியது. வெறும் கதைவாசிப்பு சலிப்பூட்டியது. ஆகவே மீண்டும்
வெண்முரசையே வாசிக்க ஆரம்பித்தேன். இப்போது பிரயாகை போகிறது. துருபதன் வஞ்சம் கொண்டு
அழியும் காட்சி மனதை உலுக்குகிறது
சுப்ரமணியம்