Saturday, March 19, 2016

சீற்றம்






வணக்கம் ஜெமோ

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

வெண்முரசின் ஆரம்ப அத்தியாயங்களை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் இது இரண்டாவது வாசிப்பு. தொடராக வந்தபோது வாசித்தேன். ஆனால் அப்போது என்னால் அதற்குள் சரிவரச் செல்லமுடியாத நிலை. ஆகவே அவற்றை ஒரு முறை வாசித்துவிட்டுவிட்டு இப்போது மீண்டும் வாசித்தேன். அற்புதமான அனுபவமாக இருந்தது முதற்கனல். அதிலிருக்கும் சீற்றமும் வேகமும் அபூர்வமானவை

அம்பையின் கதையை நிறையதடவை கேட்டிருப்பேன். ஆனால் அவளுடைய அந்த பரிதாபகரமான வீழ்ச்சியும் அவள் தீ போல கொற்றவைபோல எழுச்சி கொள்வதும் வாசிக்கையில் சிலிர்ப்பாக இருந்தது. சிகண்டியின் கதையை கண்கள் கலங்கத்தான் வாசித்து முடித்தேன். இதே வேகத்தில் வெண்முரசை முழுக்கவே வாசிக்கமுடியும் என நினைக்கிறேன்

செல்வக்குமார்