இன்றைய அத்தியாயம் மிகவும் மனச்சோர்வை அளித்தது. கடந்த சில நாட்களுக்கு படித்த பிறகு, எனக்கு ஒரு வரவிருக்கும் துர்சகுனம் குறித்து ஒரு விளக்கமுடியாத எரிச்சல்(!!) இருந்தது. அது இன்றைய அத்தியாத்தில் உருப்பெற்று வந்தேவிட்டது!
எல்லோருக்கும் மாளிகையில் ஏற்படும் அனுபவம் தான் உன்மையில் போர். அது எப்பொழுதோ தொடங்கிவிட்டது. இனி வரும் நிகழ்வுகள் அனைத்தும் அதன் பரு உலக மிச்சமே. மன்னில் நடந்த பாரதப்போரை விட இவர்களின் சித்ததில் நடந்த போர் தான் மிகவும் வலிமையானது. யாரும் யாருக்கும் விட்டு கொடுக்காத போர்.
உண்மையில் இதில் எல்லோரும் தவறு மற்றும் அதே நேரத்தில் யாரும் தவறு இல்லை! இது போண்று உணர்ச்சி நெருக்கடி, பழிவாங்குதல், துரோகம் என நிரம்பி இந்த காவிய நாயகர்கள் ஏன் கீழே விழுந்தார்கள் என்று புரியவேயில்லை. ஆனால் இந்த முரண்பாடுதான் அவர்களை காவிய நாயகர்களாக ஆக்குகிறதோ??
குழுமத்தில் ஒரு பழைய பதிவில் நண்பர் (சுநில் என்று நினைக்கிறேன்) எழுதியிருந்தார்... “அறம் ஒரு ஆட்கொல்லி நோய்”.. சரிதானோ?? (சுநில்....தவறாக இருந்தால் மன்னிக்கவும்)
சதீஷ் (மும்பை)