Sunday, March 13, 2016

படிமவெளி

 
 
"உருவழிந்த இளம்தட்சனின் முகத்தில் இதழ்கள் மட்டும் முலையருந்தும் மகவுக்குரியதாக இருந்தன. வாய்க்குள் எழுந்த நான்கு வெண்ணிறப்பால்பற்கள் தெரிய இமைதாழ்த்தி அவன் சிரித்தபோது குழந்தைமையின் பேரழகு மலர்ந்தது. “இவன் என் மைந்தன். இவன் ஒருவனின் பொருட்டு இவ்வுலகை ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக!..."

அன்புள்ள ஜெ, அபாரம், நீங்கள் கர்ணனே தான் !!

வெய்யோன் உங்களின் மற்றுமொரு பெரும் சாதனை. சூரியன் ஒளியால் வானவில் தெரிகிறது, வெய்யோனில் காண்டீபம் வளர்கிறது.  

இவ்விரண்டையும் இணைக்கும் படிமவெளி இலக்கியத்தில் ஒரு சாதனை. இந்திய ஆன்மீகத்தையும் உளவியல் உருவகங்களையும் அணுக முயலும் எவருக்கும் ஒரு பெரும் திறப்பு வாசல்.

உலக இலக்கியத்திலேயே இது போல ஏதேனும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. காக்கைகளுக்கெல்லாம் எங்கோ மேலே பருந்தாக பறந்து கொண்டிருக்கிறீர்கள்.
 
மதுசூதன் சம்பத்