எயினி - எயிறு – பல் கொண்டவள்.
மகிமை - எட்டு வகை சித்திகளில் ஒன்று
பெருத்தல்
அணிமை - எட்டு வகை சித்திகளில் ஒன்று
நுண்ணுருவாதல்
இலகிமை - எட்டு வகை சித்திகளில் ஒன்று,
எடையிழத்தல்
கரிமை - எட்டு வகை சித்திகளில் ஒன்று பேரெடை
கொள்ளுதல்
மரச்சில்லை - கடைசியாக வந்துள்ள சிறிய கிளை
தன்மத்தம் - மதம்
கோதை,– இருபக்கமும் முடிந்த மாலை
தார்-
ஒருபக்கம் முடியாத மாலை
சீராடி - குலவுதல், மகிழ்தல்
பெருஞ்சிறை – பெரிய சிறகு
தேரட்டை – பெரிய கரிய குழாய் போன்ற அட்டை
நொறி – மடிப்பு
ஞாதா-
ஞானத்தை அடைபவன்
ஞேயி – ஞானத்திற்கு இலக்காகுபவன்
நுண்ணிதின் - நுணுக்கமாக
காமிதம் - விரும்பப்படுவது
பூசெய்கை - பூசை
ஊர்த்துவன் - ஒருவகைக் மூச்சு. செங்குத்தாக
மேலெழுவது. உயிர்பிரிகையில் வருவது
மணிமிடைபவள மொழி – சம்ஸ்கிருதம் கலந்த பிறமொழி
சிலைப்பொலி – மெல்லிய பறவையொலி
நெம்புதுலா - நெம்புகோலாகச் செயல்படும்
தராசுக்கோல் போன்ற தடி
மின்னுரு – மின்னல் வடிவம்
புழைகள்-
துளை, சிறிய குகை
உழலைத்தடி - முனை உருண்ட தடி. தெய்வங்களின்
ஆயுதங்களில் ஒன்று
நெற்று - முதிர்ந்து காய்ந்த காய்
நறவு - தேன், கள்
சுனை - இயற்கை நீர்நிலை
கூகை - ஆந்தை, கோட்டான்
கொந்து - கொத்து
ஆரம் - மாலை
உரகம் - நாகம்
சிதல்கள் - கரையான்கள்
விடை - காளை (ரிஷபம்)
ஞாதா - ஞானவான், அறிகிறவன்
மதநீர் - மதம் பிடித்த ஆண் யானையின் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் பாலுணர்வு சார்ந்த நீர்; விந்து, வீரியம்
பத்தி - பாம்பு படமெடுத்தல்
வெய்யோன் - சூரியன்
மடமான் - பெண் மான்
சுஷுப்தி - ஆழ் உறக்கநிலை
துரியம் - யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை
கழை - ஓடக்கோல், மூங்கில் குழாய், கரும்பு
உன்னுதல் - நினைத்தல், முயற்சிசெய்தல்
வெண்கலைச் செல்வி - கலைமகள்
வாணாள் - வாழ்நாள்
சாங்கியம் - இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியுமான, பிரகிருதி (இயற்கை), புருடன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாத சடவாத தரிசனமாகும்
வைசேடிகம் - இந்திய ஆன்மிகத்தை ஏற்கும் ஆறு முக்கிய பிரிவுகளில் கணாதரர் எனப்படும் என்கின்ற குரு உருவாக்கிய சாத்திரம்
சுக்கான் - கப்பல், படகு போன்றவற்றை தேவையான திசையில் திருப்புவதற்கு உதவும் கருவி
களிறு - ஆண்யானை
தளைத்தல் - கட்டிப்போடுதல், தடுத்தல், அடக்குதல்
கோளாம்பி - துப்புக் கிண்ணம், படிக்கம்
நுதி - நுனி, முனை
மழு - கோடரி
மரக்குற்றி - மரச்சில்லுகள், மரத்துண்டுகள்
வரையாடு - நிலைதவறாமல் மலை ஏறும் ஒரு மான்வகை, மலையாடு, காட்டாடு
அரவு - பாம்பு
வலசைப் பறவை - பருவகாலங்களுக்கேற்ப புலம்பெயரும் பறவை
வெள்ளாரங்கல் - சலவைக்கல்
அண்மை - சமீபம், அருகில், பக்கம்
சேய்மை - தூரம், நீளம், தொலைவு
வஜ்ராயுதம் - இந்திரனின் ஆயுதம்