Friday, March 11, 2016

சிலிர்ப்பு


அன்புள்ள ஜெ,

செல்வோம் செல்வோம் என்பது கொல்வோம் கொல்வோம் என மாறுகிறது. மோகினியிடம்  அவமானப்பட்ட பெருநாகம் ராகு. அந்த சூரிய கிரகணத்தை இந்த மாயமாளிகையில்  அவமானப்பட்டதோடு இணைத்து பார்க்கையில் வார்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வில் வந்து சேர்ந்திருக்கிறேன். சூரியகிரகணம். சூரியனை நாகம் கவ்வுகிறது. வெண்முரசை தொடர்ந்து படிப்பவர்களுக்கு உடனே புரிகிற உவமைதான் இது. ஆனாலும் வாசித்துக்கொண்டே வரும்பொது அதை உணர்ந்த கணத்தில் ஏற்பட்ட ஒரு சிலிர்ப்பு  சிறந்த அனுபவமாக இருந்தது.

காளிப்பிரசாத்