Saturday, March 5, 2016

சில நுட்பங்கள்






ஜெ

துரியோதனன் அவமதிப்புக்குள்ளாகும் நிகழ்வை மிகநுட்பமாகப்பின்னியிருக்கிறீர்கள். அதுவரை இருந்த ஒருபதற்றத்தை மெல்ல ease செய்கிறீர்கள். சின்னச்சின்ன பேச்சுக்கள். சிரிப்புகள். அப்சர்வேஷன்ஸ் என்று போகிறது. மிக அபத்தமாக அது முடிகிறது

ஆனால் கவனிக்கவேண்டியவை சில உள்ளன.
1.   துரியோதனன் அந்த மயநீர் மாளிகைக்குப்பின் ஒருவகை அமைதியில்லா நிலையிலே இருக்கிறான். அவன் என்ன கண்டான்? அவன் கலிபுருஷனாக உள்ளூர இருப்பதை கர்ணன் காண்கிறான். ஸ்தூணகர்ணனையும் காண்கிறான். ஆனால் துரியோதனன் கண்டது என்ன என்பது ஒரு மர்மம். அவன் திரௌபதியை கண்டான் என்று ஊகிக்க சில க்ளூக்கள் உள்ளன
2.   கர்ணன் ஏதோ தப்பு நிகழவிருக்கிறது என்று ஊகித்தான் ஆனால் சொல்லமுடியவில்லை
3.   அவன் செல்லும்போது நிகழ்ந்தது ஒரு விபத்து. ஆனால் அப்படி நிகழும் அளவுக்கு அவன் மனம் கலங்கித்தான் இருக்கிறது
4.   அந்தக்கூடம் ஒரு சிப்பி என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஜெயராமன்