Saturday, March 5, 2016

கடத்தல்







ஜெ

துரியோதனன் இருமுறை ‘கடந்துபோகவேண்டும்’ என்று சொல்கிறான். அவன் எதைச்சொல்கிறான் என்பது நுட்பமாக அந்தக்காட்சிக்கு முந்தைய மாயக்காட்சியிலே உள்ளது. பல விஷயங்கள் அதில் நுணுக்கமானவை. பலராமன் அனுமனாக ஆவது. ஜராசந்தனுக்கும் கார்த்தவீரியனுக்குமான ஒற்றுமை. இருவரையும் துண்டுகளாக வெட்டினார்கள். அப்படிப்பலவிஷயங்கள். அங்கே கண்ட எதையோ கடக்க முயன்றான்

அந்த வழுக்குப்பரப்பு அவன் மனம் அல்லவா? அவன் அங்கே நிலைதடுமாறியது தன் உள்ளத்தில் தடுமாறியதுதானே? அவன் திரௌபதிக்கு முன் சென்று உனக்கு நானே தேவயானியின் க்ரீடத்தை அளித்தேன் என்று சொல்லத்தானே சென்றான். அவன் அத்தனை பிற எண்ணங்களையும் கைவிட்டுவிட்டான் அல்லவா? ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் ஒரு நல்லுறவை உருவாக்கவே அவன் வந்தான். அதைக்கூட மறந்துவிட்டனே. அப்படியென்ரால் அவன் எண்ணம் என்ன?

அதைஎல்லாம் எண்ணித்தான் திரௌபதி புன்னகைசெய்தாளா? அதைத்தான் நினைத்துப்பார்த்துக்கொண்டே இருந்தேன்

சுவாமி