Tuesday, April 19, 2016

நோய்தாக்காத இருவர் (பன்னிரு படைக்களம் 21)


   

துரியோதனன் உள்ளம் இயல்பில் பெருந்தன்மையானது இல்லை. சிறூ வயதிலிலேயே இரக்கம் மன்னிப்பு போன்ற் அமென் குணங்களை அவன் நீக்கிக்கொண்டவன்.  அதன் காரணமாக பாண்டவர் மேல் எப்போதும் ஒரு கசப்புடன் இருந்தவன். நூறூ பேருக்கு அண்ணனான தனக்கே ஒரு  அண்ணனா என தருமனை ஏற்றுக்கொள்ளாதவன்.  தன்னைவிட அல்லது தனக்கு நிகராக  பலம்கொண்டவன் பீமன் என்பதை சற்றும் சகித்துக்கொள்ளமுடியாதவனாக இருந்தவன். இது அவனுக்கு இயல்பாக அமைந்துவிட்ட பிறவிக்குணம்.  ஆனால் திருதராஷ்டிரன் என்ற பெரிய  மனதின் நிழலில், பானுமதி என்ற அன்பில் குளிந்த மனதின் அருகாமையில்  அவன் மனம் தன் இயல்பை இழந்து அவர்களின் குணங்களின் தாக்கம் பெற்று மென்மையும் மேன்மையும் பெற்று இருந்தது. 
        
 இவ்வளவு நாட்கள் அன்பிலும் பாசத்திலும்  கட்டுண்டிருந்த அவன் மனம் இப்போது    மயநீர் மாளிகையில் அவன் அடைந்த அவமானம் அவனைப் பிணைத்திருந்த அந்த மெல்லிய பட்டுக்கயிறுகளை அறுத்துவிடுவதால்   அந்த தாக்கங்களில் இருந்து விடுபட்டு தன் சுய இயல்பை அடைகிறது.  அவன் உள்ளம் ஒரு வகையில் விடுதலை அடைந்திருக்கிறது  என்றுதால் சொல்ல வேண்டும்.  அதைப்போல் கணிகரின் சூழ்ச்சித்திறன்,  கோணலான சிந்தனை போன்றவை துரியோதனன் கொண்டிருந்த பெருந்தன்மை மற்றும் மன்னிக்கும் குணத்தினால் மட்டுபடுத்தப்பட்டிருந்தது.  துரியோதனனின் மாற்றம் கணிகருக்கும் சுதந்திரத்தை அளித்திருக்கிறது.  அதனால் இந்தச்சூழலில்  இந்த இருவரும் இயல்பாக இருக்கிறார்கள்.   கௌரவர் பாண்டவர் இடையிலான இந்த மன விலக்கம் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அனைவருக்கும் மன சங்கடத்தையும் குழப்பத்தையும் தருகிறது.  சகுனி  முழுநேர  சூது செய்பவனாக மாற வேண்டிய நிலைக்கு ஆளாவதால் அவருக்கும் இது சங்கடமான நிலைதான். இந்தச் நிலையைதான் அவர் இவ்வளவு நாட்கள் எதிர்பார்த்திருந்தார் என்றாலும் அவர் ஆதி இயல்பு இப்படி சூது செய்யும் இயல்பிற்கு மாறானது.  துரியோதனன் கணிகர் தவிர மற்ற அனைவரும் இந்தப் பறவைக்காய்ச்சல் நோயால் அவதிப்படுவதுஎன்பது  வெண்முரசு இவர்களைத்தவிர மற்றவர்கள்  மனச்சங்கடத்திற்கு ஆட்பட்டிருப்பதை உருவகிக்கிறது  என நினைக்கிறேன்.



தண்டபாணி துரைவேல்