Monday, April 18, 2016

கனவுகளின் ஒளி





அன்புள்ள ஜெமோ

நகரில் ஒவ்வொருவரும் கெட்டகனவு காணும்போது விதுரர் இனிய கனவு காண்கிறார். நகரில் ஒவ்வொருவரும் நோயில் இருக்கும்போது கணிகர் ஆரோக்கியமாக இருக்கிறார். இந்த இடங்களை எல்லாம் தொட்டு இதுவரை வந்த வெண்முரசின் பிற அத்தியாயங்களை வாசிப்பது ஒரு பெரிய மூளைப்பயிர்சியாக இருக்கிறது. கணிகருக்கும் விதுரருக்கும் நடுவே ஓர் ஒற்றுமை உண்டு என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்தது.

அதேபோல துரியோதனன் காணும் நகரக்காட்சியையும் சொல்லவேண்டும். கரிய அந்த பாசி இருட்டில் மின்னுவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது உண்மையில் காட்டில் சிலவகை பாசிகள் இருட்டிலே மின்னும்

ஜெயசீலன் நடராஜன்