Friday, April 15, 2016

சிறுவர்கள்



ஜெயமோகன் அவர்களுக்கு

ஒரு காவலன் அங்கே நின்று கைதூக்கி கூச்சலிட்ட சிறுவர்களை நோக்கி ஏதோ சொல்ல சிறுவர்கள் கூச்சலிட்டபடி வந்து இளவரசர்களை மிதிக்கத்தொடங்கினர். முதலில் சிரித்துக்கொண்டு விளையாட்டாக மிதித்தவர்கள் மெல்லமெல்ல வெறிகொண்டனர். உறுமியபடி காட்டுவிலங்குகள் போல மிதித்தனர். வீரர்கள் “போதும் போதும்” என்று அவர்களை விலக்கியும் அடங்கவில்லை. இளவரசர்களை இழுத்துக்கொண்டு வந்தபோதுகூட சில சிறுவர்கள் வெறியுடன் கூவியபடி ஓடிவந்து எட்டி உதைத்தனர். கற்களால் அவர்களை அடித்து கைசுருட்டி கூச்சலிட்டனர்.


இந்த வரியை ஒரு பதைப்புடன் வாசித்தேன். ஏனென்றால் In the killing fields என்னும் சினிமாவை நான் ஒருமுறை பார்த்தே நடுங்கினேன். அதில் சிறுவர்கள் போல்பாட்டின் கொடூரமான கொலைகார ராணுவமாக எப்படி ஆனார்கள் என்பது சொல்லப்பட்டிருக்கும்.ஏனென்றால் சிறுவர்களுக்கு பகுத்தறிவு இல்லை. உணர்ச்சிகள் மட்டுமே உள்ளன.அவர்களை கொலைகாரர்களாக ஆக்குவது மிக எளியது

எல்லா சர்வாதிகாரிகளும் அதைச் செய்கிறார்கள்

சரவணன்