Monday, April 25, 2016

தேன் குடிக்கும் யானை



ஜராசந்தனையும் பிரதிவிந்தியனையும் ஒருசேரக்காண்பதில் ஒரு கவிதை இருக்கின்றது.

கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக-என்கிறார் வள்ளுவர்.

கற்பதன் மூலம் தெரிந்துக்கொள்கின்றோம் புரிந்துக்கொள்கின்றோமா? தெரிந்துக்கொண்டேன் என்கிறான் ஜராசந்தன் புரிந்துக்கொண்டேன் என்கிறான் பிரதிவிந்தியன்.

தெரிந்துக்கொள்ளுதல் என்பது அறிதல் மட்டும்தான் புரிந்துக்கொள்வதுதான் அனுபவம். தெரிந்க்கொள்வதன் மூலம் ஒரு சுவை வருகின்றது. புரிந்துக்கொள்பதன் மூலமே  இன்பம் ஏற்படுகிறது.

ஜராசந்தன் புலவர்களை அவையில் கூட்டிவைத்து நூல் ஆய்வது எல்லாம் தெரிந்துக்கொள்வதற்கு அதில் இருந்து எந்த இன்பத்தையும் அவன் பெற்றுவிடவில்லை, இது ஜராசந்தனின் ஒரு மனநிலையாக இருக்க கொல் அழிக்க அதிர நடக்க தனது ஆணவத்தின் இன்பத்தை சுவைக்கவே நினைக்கிறான். இது அவனின் இரண்டாவது மனநிலை.

 சிறுதேன்துளி உண்ணும் சிறுப்பூச்சி அல்ல நான் ஒரு மூச்சி பெரும்அளவு தேன் உறிஞ்சும் களிறு என்று சொன்ன ஜராசந்தன்தான் யானை சிற்றுயிர்களை தேடித்தேடி மிதித்துக்கொள்ளும் என்றும் சொல்கிறான். தேன் குடிக்கும் யானை ஒரு பாதி என்றால் உயிர்களை மிதித்துக்கொள்ளும் யானை மறுபாதி. இரண்டுபாதியும் ஒரு யானைக்குள்தான் இருக்கிறது. யானை ஜராசந்தனுக்கு அழகாக பொருந்தும் உருவகம்.

யானை தேனை தெரிந்து இருக்கறிது புரிந்தா இருக்கிறது.? புரிந்து இருந்தால் யானை நந்தியாகிவிடும். நந்தியானால் அது புடவியின் பருவிசையை தாளங்கலால் துண்டுகளாக்கி ஆடல் வல்லானுக்கு அர்சித்துக்கொண்டு இருக்கும். ஓலங்களை எழுப்பும் உயிர்க்குடித்தல் செய்வதில்லை.
கற்றலுக்கு எதிர் திசையில் நிற்கும் ஜராசந்தனைக்கண்டக்கண்களால் பிரதிவிந்தியனைக்காணும்போது யானை நந்தியாவதுபோல் உள்ளது.

//“இவர் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் முனிவரின் மைந்தர்.” சுரவர்மன் சுற்றிலும் பார்த்துவிட்டு உரக்க நகைத்தான்.//

நகைத்தாலும் உண்மை உண்மைதான். 

ராமராஜன் மாணிக்கவேல்