Wednesday, April 20, 2016

தாமரையும் சக்கரமும்





அன்புள்ள ஜெமோ,

பன்னிருபடைக்களம் சிக்கலான ஒருபின்னலாகச் சென்றுகொண்டிருக்கிறது. இன்று சிம்மம் எருதை வீழ்த்தும் சித்திரத்தையும் அதிலிருந்து சமநிலைகுலைந்து ஒரு பெரிய ஆடல் ஆரம்பிப்பதையும் கண்டேன். தேவி அவளே தன் ஆடல்தொடங்க, ஒரு அத்துமீறலுக்காகக் காத்திருக்கிறாள் என்ற அர்த்தம் வந்தது. எதிர்நிலையில் கிருஷ்ணன் நின்றிருக்கிறார் என்று தோன்றியது. 

இந்த உள்ளோட்டங்களுடன் இந்நாவலை வாசிப்பது மகாபாரதத்தையே ஆன்மீகமாக பல உள்ளடக்கங்களுடன் வாசிப்பதுபோன்ற அனுபவமாக அமைந்தது. 

எல்லாமே அன்னை ஆடும் சூது என்பது பெரிய டிவிஸ்ட். மகாபாரதம் என்னும் வைணவநூலுக்கு ஒரு சாக்த விளக்கம் என்ருதான் பன்னிருபடைக்களத்தைச் சொல்லமுடியும்

ஜெயராமன்