Wednesday, August 24, 2016

அனைத்தையும் துலங்கவைப்பது





ஜெ,

கீதைக்கு அனைத்தையும் துலக்கும் கைவிளக்கு என  ஒரு புகழாரம் உண்டு. கிருஷ்னனின் குருவின் பெயர் சாந்தீபனி முனிவர். அவ்விரண்டு குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நீங்கள் அளித்திருக்கும் மிக விரிவான சித்தரிப்பு கீதையையும் அதன் தரிசனத்தையும் புரிந்துகொள்ள மிகமிக உதவியானது. தன்னொளியால் தானே துலங்குவது ஆத்மா என்பார்கள். பிரம்மத்தின் குனம் அது. அதற்கு பிறிதொன்று தேவையில்லை. ஆகவே சிருஷ்டியாக மாறி கோலாஹல ரூபம் கொள்வதற்கு அதற்கு எந்தவகையான புறத்தூண்டுதலும் தேவையே இல்லை. அதுவே தன்னளவில் பரிபூர்ணமானது. ஆனாலும் அது தன்னைவைத்து இந்த ப்ரபஞ்சத்தை ஆடிக்கொள்கிறது. அந்தக்காடு மிகச்சிறந்த உதாரணம். கண் இல்லாவிட்டாலும் ஒளி இருக்கும் என்றி அதைப்பார்த்ததும் புரிந்தது

சுவாமி