Thursday, August 25, 2016

நிலைபாடு





ஜெ

இன்றையவெண்முரசில் ஒரு இடம் என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையில் இதை நானே முன்பே கவனித்திருக்கிறேன் என்றும் நானே பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறேன் என்றும் சொன்னால் தப்பாக நினைக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். தத்துவவாதிகளுக்கு உண்மையில் தேவையாக இருப்பதெல்லாம் ஒரு நிலைபாடு மட்டுமே. நிலைபாடில்லை என்றால் அவர்கள் பதறிப்போகிறார்கள். 

நிலைபாடு எடுத்தபின்னாடி அவர்களால் அதை முழுக்க நம்ப முடிவதில்லை. ஆதலால் அவர்கள் அந்த நிலைபாட்டை திரும்பத்திரும்ப நிரூபிக்க முயற்சி செய்தபடியே இருப்பார்கள். ஆகவேதான் அவர்கள் அவ்வளவு மூர்க்கமாக இருக்கிறார்கள். 

மறுப்பே அவர்களின் ஏற்பை நிலைநிறுத்தியது.  அனைத்து தத்துவமாணவர்களும் மறுப்புகளால் ஆனவர்கள். என்ற வரி மிகமிக முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. தத்துவத்தைச் சமநிலையில் பார்ப்பவர்களுக்கு முக்கியமான எதிரிகளே தத்துவநிலைபாடுகொண்டவர்கள்தான்.

எஸ்.ராம்நாத்