அன்புள்ள ஜெ,
ஒவ்வொரு வேதபாடசாலையும் ஒவ்வொரு வகையில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒன்றேபோலவும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் இவை கருத்துத்தரப்பின் ஒரு சின்ன வட்டத்துக்குள் நின்றிருக்கின்றன இல்லையா? இவர்களுக்குள் உள்ள வேறுபாடே சின்னதுதான்.
இப்போதுகூட பிரம்மசமாஜம் ஆரியசமாஜம் ராமகிருஷ்ண மடம் எல்லாமே அத்வைத மடங்கள். ஆனால் ஒன்றுக்கொன்று நுட்பமான மாறுபாடுகளும் உடையவை. இந்த மாறுபாடுகள் தத்துவ சிந்தனையில் முக்கியமானவை
பிருஹதாரண்யஹ மரபில் வேதாங்கங்கள் முழுமையாகக் கற்பிக்கப்படுகின்றன என்றால் என்ன அர்த்தம் என்றால் அவர்கள் வேதங்களை ஒரு சடங்குக்குரிய பாடல்களாக மட்டும் நினைக்கவில்லை என்பதுதான். அவர்கள் வேதங்களை ஒரு ஞானமரபின் தொடக்கமாக மட்டுமே நினைக்கிறார்கள்.
அந்த இடம் அழகாக இருந்தது. நகரைவிட்டு வந்தபின் தருமன் கலைகளை முதல்முறையாகப்பார்க்கிறான் என நினைக்கிறேன்
மனோகர்