ஜெ
நேற்று
வந்த குட்டிக்குரங்கை விதுரர் சொல்லும் அந்த
தத்துவத்துடன் இன்றுதான் இணைத்து வாசித்தேன். வாழ்க்கை உறவுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
சிலந்தி வலைபின்னுவதுபோல இயல்பான ஒன்று அது. அதை ஏன் இல்லை என்று மறுக்கவேண்டும்? அதை
மாயை என்று நினைக்கவேண்டுமா என்ன ? அதுவே ஓர் உண்மை அல்லவா? அதை அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?
அந்தக்குரங்கின் அன்பை தட்டிவிட்டு மேலே சென்று அடையும் உண்மை அப்படி என்ன பெரிதாக
இருந்துவிடப்போகிறது? இதையே நினைத்துக்கொண்டிருந்தேன்
ராஜன்