Sunday, August 14, 2016

மாமனிதர்களின் மண்



ஜெ

இன்றுவந்த இவ்வரி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. எப்போதும் கேட்டுப்பழகிய  கருத்துத்தான். ஆனால் அது சொல்லப்பட்ட மொழிதான் என்னை ஒருமாதிரிப் பதறவைத்தது


“வானளித்ததை உண்டு மண்ணுக்கு அறிவை மட்டுமே அளித்துச்சென்ற சான்றோர் தறிமேடையில் அமர்ந்து நெய்தெடுத்த பட்டு இந்த மண். பெறுவதற்கு எவரிடமும் எதுவும் இல்லை என்பதனால் முழுவிடுதலைகொண்டோரால் சொல்நிறுத்திக் காக்கப்படுவது”

சமீபத்தில் அரவிந்தன் கண்னையன் என்பவர் காந்தி பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். காந்தியும் அப்படி வாழ்ந்தவர்தானே. அவரைப்பற்றியும் பாரதத்தைப்பற்றியும் இதையே சொல்லலாம் அல்லவா?

எத்தனை மாமனிதர்களின் மண் இது என்று தோன்றிவிட்டது

எஸ். முருகேஷ்