ஜெ,
விதுரரின்
அலைக்கழிப்பையும் அவரது மீட்சியையும் பார்த்தேன். இது என் சொந்தக்காரர்களில் பலருக்கு
நிகழ்ந்திருக்கிறது. ‘ரிட்டயர் ஆன பிறகு அக்கடான்னு
எல்லாத்திலே இருந்தும் போயிடணும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நிறையபேர் சேமித்த
பணத்தை எல்லாம் கொண்டு சீரங்கத்தில் பிளாட் வாங்கியதுண்டு. ஆனால் அங்கே ஆறுமாதம்கூட
இருக்கமுடியாது. திரும்பி சென்னைக்கே வந்துவிடுவார்கள்.
காரணம் அவர்கள் தங்களைப்பற்றிக்
கற்பனைசெய்துகொண்டிருப்பது போல உண்மையில் அவர்கள் இல்லை என்பதுதான். இங்குள்ல லௌகீகத்தில்
மூழ்கி இருக்கிறார்கள். பரமார்த்திக விஷயத்தில் ஈடுபடுவதற்கு மனமில்லை. அதை நேரமில்லை
என்று சொல்லி பின்னர் அதையே நம்பிக்கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும்போதுதான் தெரியும்
மனம் முழுக்கமுழுக்க இருப்பது லௌகீகம்தான் என்று.
விதுரரும் அப்படித்தான். லௌகீகத்தில்
சிக்கியவன் அதிலிருந்து எளிதில் மீளமாட்டான். மீளக்கூடியவனிடம் அந்த இயல்பு ஆரம்பம்
முதலே இருந்துகொண்டிருக்கும். அவனால் லௌகீகத்தில் மூழ்கிக்கிட்க்கவே முடியாது
ஆர்.
ஸ்ரீனிவாசன்