ஜெ
வேதம்செழித்த
பிருகதாரண்யகத்தின் கதையை இணைத்துப்பார்க்கும்போது ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.
சூரியர் தேடுவது தனக்கு மட்டுமேயான மெய்மையை. அதுதான் அகம்பிரம்மாஸ்மி. ஆனால் வைசம்பாயனர்
தேடுவது விரிந்துபரவி அனைவருக்குமாக ஆகும் மெய்மையை. அதுதான் கிருஷ்ணசாகைகளாக மாறி
விரிகிறது. அவரது மாணவர் யாக்ஞவல்கியர் மேலும் விரிகிறார். அவர் அவ்வழியே வந்து சேர்ந்த
இடம் சூரியரின் சன்னிதி. அவரிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டது அகம்பிரம்மாஸ்மி
இந்த
இரண்டும் பயணங்களாக இரண்டு திசைகள். ஆனால் ஒரு வட்டத்தைச் சுற்றி வந்து ஒன்றாகச்சேர்ந்துவிட்டார்கள்
என்று தோன்றியது. அது என் வாசிப்புப்பிரச்சினையா அல்லது உண்மையிலேயே அப்படித்தானா என்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
சாம்பசிவம்