Friday, August 19, 2016

வேதகாலப் பெண்கள்





அன்புள்ள ஜெ

யாக்ஞவால்கியர் கதையில் மைத்ரேயியுடனான உரையாடல் புகழ்பெற்றது. அந்தக்கதையை அன்றெல்லாம் பெண்கள் அனைத்தையும் கற்றிருந்தார்கள் என்பதற்கான உதாரனமாகச் சொல்லுவார்கள். பெண்கள் அத்தனை அறிவுள்ளவர்களாக இருந்தாலும் கடைசிவரை  அவர் அவர்களுக்கு ஒன்றும் கற்பிக்கவில்லை என்றுதானே அந்தக்கதை சொல்கிறது என நானும் எண்ணியிருக்கிறேன்.

 இதில் காத்யாயினி கதையைச் சொல்கிறீர்கள். இவள் கதை இத்தனை விரிவாக எங்கும் வாசித்ததில்லை. இப்படி வெறும் உதாரணகதைகளுக்கு மானுட முகம் கொடுப்பதன் வழியாக அவர்களை அழியாமல் நினைவில் நிறுத்தி அந்தக்கதையையும் ஒரு வாழ்க்கைக்கதையாக ஆக்கிவிடுகிறீர்கள்.
நிற்க, யாக்ஞவல்கியர் வேதங்களை வாந்தி எடுத்த கதை பிற்காலத்தையது. அது ஒரு அழகற்ற அசிங்கமானகதை. நம்மூர் கதாகாலட்சேப ஆசாமிகளுக்கு உரியது. அதை அழகான கதையாக ஆக்கி ஒரே போக்கில் இணைத்துவிட்டீர்கள். நன்றி

மகாதேவன்