ஜெ
இன்றைக்குதான் நான் சொல்வளர்காட்டில் மைத்ரேயி கதையை வாசித்தேன். உடனே மைத்ரேயி தேவியின் அமரத்துவம் வாய்ந்த காதல்கதையையும் வாசித்தேன். மிகப்பெரிய மன எழுச்சி ஏற்பட்டது. மைத்ரேயி தேவியின் வாழ்க்கையை The women of tagore என்னும் கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். மைத்ரேயி தேவி தாகூரின் காதலி. கணவனுடன் இருந்தபோதும் அந்தக்காதல் நீடித்தது
ஆச்சரியமான கேள்வி. மைத்ரேயி தேவிக்கும் தாகூருக்கும் 30 வயதுக்குமேல் வேறுபாடு. அந்தக்காதல் எப்படி வந்தது? எப்படி அது நீடித்தது? அதற்கான காரணம் இன்றைய சொல்வளர்காட்டு கதையில் உள்ளது. மைத்ரேயி தேவி சொல்கிறார், அவர் கண்களுக்கு தாகூர்தான் ஆண்மகனாகத் தெரிந்தார். தான் தாகூரின் காதலி என்று சொல்ல அவருக்கு கூச்சமில்லை. மிர்ஸாவின் காதலி என்று சொல்ல கசக்கிறது
அது ஞானத்தின் மீதுகொண்ட காதல் என்று சொல்லலாம் என நினைக்கிறேன்
செம்மணி அருணாச்சலம்