Thursday, August 25, 2016

வெண்முரசு ஆய்வு


அய்யா வணக்கம்,
 
எனது பெயர் கோ.ராதிகா. நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில்  தமிழ்த்துறையில் ஆய்வியல்  நிறைஞர் பட்டத்திற்காகப் பயின்று வருகிறேன்.   நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்  என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள முதற்கனல், நாவலை ஆய்வு நூலாகத் தேர்வு செய்துள்ளேன். இந்நாவல் சிறந்த முறையில் படிப்பதற்கு  ஏற்றவாறு உள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பொருள் புரியாதனவற்றை புரிந்து கொள்ளும் வகையில்,  தாங்கள் பின்னிணைப்பாக கொடுத்துள்ள  விளக்கம் பயனுள்ள விதமாக அமைந்துள்ளது. இந்நாவல் காட்சியோட்ட முறையில் அமைந்திருப்பது சிறப்பு.  வேங்கையின்  தனிமை என்னும் பகுதியில் பீஷ்மர் கடந்து செல்லும் இயற்கைக் காட்சிகள் கண்முன் நிகழ்வதுபோன்று உள்ளது.
           மேலும் இவ்வாய்விற்குத் தேவையான உதவிகளைச் செய்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கான பதிலை எதிர்நோக்கிக் கொண்டிருப்பேன் ஐயா..

               நன்றி!
 
கோ.ராதிகா
 
அன்புள்ள ராதிகா
 
வாழ்த்துக்கள்
 
ஆய்வுக்கு உதவக்கூடிய இரு தளங்கள் உள்ளன
 
1.  http://venmurasudiscussions.blogspot.sg/
2  https://epicvenmurasu.wordpress.com/

இவ்விரு இணையதளங்களிலும் ஏராளமான கட்டுரைகள் உள்ளன. கடிதங்கள் உள்ளன. வெண்முரசைப்பற்றிய வெவ்வேறு வகையான பார்வைகளை இவை அளிக்கும். இவற்றிலிருந்து நீங்கள் உங்கள் நோக்கை உருவாக்கிக்கொள்லலாம்

ஜெ