Monday, August 15, 2016

தத்துவத்தின் உளவியல்





ஜெ

வெண்முரசில் இவ்வரிகளை வாசித்தபோது என் இளமையிலிருந்த பல நண்பர்களை நினைத்துக்கொண்டேன்.

அவர்களை எளிதில் நிறைவடையச் செய்யமுடியாது. ஏனென்றால் நாம் வாழ்க்கையைப்பற்றி பேசினால் அதற்கு தத்துவ ஒருமையை கோருவார்கள். தத்துவ ஒருமைகொண்ட கூற்றுகளுக்கு வாழ்க்கையில் ஆதாரம் கேட்பார்கள். அவர்கள் தாங்களே அறிந்து அடங்கவேண்டும் அல்லது அனைத்திலிருந்தும் அகன்று செல்லவேண்டும்.

அவர்கள் எல்லாம் அன்று தீவிர இடதுசாரிகளாாக இருந்தார்கள் . கொந்தளித்துக்கொண்டே இருந்தார்கள் ஆனால் மெல்லமெல்ல ஏமாற்றம் அடைந்து மிகவும் லௌகீகர்களாக ஆகிவிட்டார்கல். அவர்களுக்கு எதுவுமே முக்கியமில்லை என்று ஆகிவிட்டது

தத்துவத்தை ஒரு பாடமாகப்படிப்பவர்களுக்குத்தான் அதை முழுமையாக படிக்கமுடியும். அதை வாழ்க்கையாகப்படிப்பவரர்கள் அதனுடன் மோதி அழிவார்கள். ஆனால் அவர்களில் சிலர்தான் தத்துவத்தை உருவாக்குகிரார்கள்

தத்துவவிவாதம் நிகழும் ஒருநாவலில் தத்துவக்கல்வியின் மனோவியல்  சார்ந்தும் வருவது ஆச்சரியமானதுதான்



சண்முகம்