Saturday, August 13, 2016

வரலாற்றுப்பாத்திரம்





ஜெ

இன்றைய வெண்முரசு கிருஷ்ணனின் வரலாற்றுப்பாத்திரம் என்ன என்பதை தெளிவாகவே சொல்லிவிட்டது. மற்ற அத்தனைபேரை விடவும் தருமன் அதை நுணுக்கமாகப்புரிந்து வைத்திருக்கிறான் என்பதும் ஆச்சரியம் அளிக்கவில்லை. அவன்  ‘வேதம்புதிது செய்யவந்த வித்தகன்’

முன்பு கிருஷ்ணனின் குணச்சித்திரம் வந்துகொண்டிருந்தபோது அவனை மானுடனாகக் காட்டிவிட்டீர்கள் என்ற மனக்குறை பலருக்கு இருந்தது. கடைசியில் ஒரு யாதவசாம்ராஜ்யத்தை உருவாக்க வந்தவன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றெல்லாம் கூட சிலர் சொன்னார்கள். ஆனால் சும்மா தெய்வமாகவும் காட்டாமல் கிருஷ்ணனை பேருருவம் கொள்ளச்செய்துவிட்டீர்கள். இந்தக்கிருஷ்ணன் உருவாக்கியதே இந்த பாரதம் என்றுகூடச் சொல்லலாம் என நினைக்கிறேன்

மகாதேவன்