Saturday, August 27, 2016

கிருஷ்ணனும் டேவிட்டும்






ஜெ,

இன்றைய வெண்முரசில் கிருஷ்ணர் சங்கனைவென்ற கதை வருகிறது. அது ஒரு டெம்ப்ளேட் கதை. கதைகளின் டெம்ப்ளேட் பற்றி கூடவே ஒரு விவாதமும் வருகிறது. டேவிட் கோலியாத் கதையும் இதுதான் இல்லையா? இதில் எது பழையது? கிருஷ்ணன் கம்சனை ஜெயித்ததா இல்லை டேவிட் கோலியாத்தை ஜெயித்ததா? ஏனென்றால் பைபிளுக்கே அது ஒரு பழைய கதையாக உள்ளது?

நான் என்ன நினைக்கிறேன் என்றால் இதெல்லாமே இவை அனைத்துக்கும் பழைமையான ஃபோக் கதைகளில் இருந்து வந்திருக்கும். ஆப்ரிக்கப் பழங்குடிக்கதைகளில் இதேமாதிரிக் கதை உண்டா என்று பார்க்கவேண்டும்

சி.டேவிட் ஞானராஜ்