ஜெ
இன்றைய அத்தியாயத்தில் முதியவயதில் மைந்தரைப்பெறும் தந்தையின் மனநிலையும் அவர் காட்டும் அன்பின் மிகையான போக்கும் அற்புதமாகக் காட்டப்பட்டுள்ளன. தானறிந்த அனைத்தையும் ஒரே நாளில் மகனுக்குக் படிக்கவைக்க முடியாமல் கோபம் கொண்டு உடனே குளிர்ந்து மீண்டும் கோபம் கொண்டு அவர் பையனைப்போட்டு அலைக்கழிக்கிறார்.
என் காற்றும் வானும் பொருள்வயப் பேருலகும் அனைத்தும் அவரே என்பதுபோல. அவர் சொல்லாகவே இருந்தது என் சித்தம். நானே எதையேனும் எண்ணிக் கண்டடைந்து மகிழ்ந்த மறுகணமே அது அவரது சொற்களே என்று உணரும் தருணத்தின் சோர்வு ஒவ்வொன்றும் ஓர் இறப்பாக இருந்தது எனக்கு.
என்றவரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். ஏனென்றாால் இத என் வாழ்க்கை. நான் என் அப்பாவிடமிருந்து கடைசிவரைக்கும் விடுபடவே இல்லை
ஆர்.சிவக்குமார்