‘நச்சுப்
பாம்பை வளர்ப்பவன் அதனால் கடிபட்டாகவேண்டும் அல்லவா? உன்னிடமும் வளர்கிறது அச்சொல்’
என்று ஆசிரியர் கிருஷ்ணனிடம் சொல்லும் இடம் முக்கியமானது. தத்துவக்கொள்கைகளை புத்தியில்
ஏற்றுக்கொண்டு அதையே சொல்லிக்கொண்டிருப்பவர்கள் உண்டு. சொல்லிச் சொல்லி அவர்கள் அறியாமலேயே
அதுவாக ஆகிவிடுவார்கள். ஒருநாள் வாழ்க்கையில் அதன்மீது அடிவிழும். அப்போது தெரியும்
ஒரு தத்துவம் எப்படி வாழ்கையாக ஆகிரது என்று.
இங்கே
சொல்வளர்காட்டில் இந்த விஷயம் வந்துகொண்டே இருக்கிறது. தத்துவத்தை வாழ்க்கையுடன் இணைப்பதில்
வெற்றியும் தோல்வியும் அடைபவர்களின் கதையாகவே சொல்வளர்க்காடு நாவலை வாசிக்கமுடியுமென
நினைக்கிறேன்
நடராஜன்