Friday, April 8, 2016

குருதிச்சுவை




“உன் குருதியை அவனுக்கு அளிக்காதே. அச்சுவை அறிந்தால் பின் அவன் எதையும் உண்ணமாட்டான்” என்றனர் மருத்துவச்சிகள். 

என்னும் வரி துணுக்குறச் செய்தது. அன்னையின் ரத்தத்தைச் சுவையறிந்தவர்கள் வேறு எதையுமே குடிக்கமாட்டார்கள் இல்லையா?

ஆனால் எவருமிலாதபோது அவள்  தன் கைவிரலை நுனிவெட்டி அவன் வாயில் வைத்து உண்ணக்கொடுத்தாள். விழிசொக்கி உடல் தளர்ந்து மெல்ல மீட்டப்பட்டு உச்சம் கொண்டு பின் ஒரு கனவில் அவள் விழித்தெழும் உலகிலேயே அவள் உண்மையில் வாழ்ந்துகொண்டிருந்தாள்.

ஆனால் தன் ரத்ததைக்குடிக்கக்கொடுக்கையிலேயே அன்னை மகிழ்ச்சியையும் நிறைவையும் உணர்கிறாள். உண்மையிலேயே வாழ்கிறாள்.

ஒரேசமயம் இன்றையகாலகட்டத்திற்கான வரி. ஆனால் மிகச்சரியாக ரக்தபீஜனைப்புரிந்துகொள்வதற்கான வரி

மனோகரன்