Tuesday, August 9, 2016

மண்ணுக்குள் மண்புழுக்கள்



ஜெ

இன்றைய அத்தியாயத்தில் திருதராஷ்டிரர் அத்தனை அடுக்குகளையும் களைந்து தந்தையாக மட்டுமே வெளிப்படுகிறார். சொல்லப்போனால் கடைசியில் அவர் ஆசிவாங்க வந்த பீமனை அணைத்து இறுக்கிக் கொல்வாரே அந்த இடம்போன்றது இது

அதை காலன் சொல்லும் விதமும் அழகானது. யானையுடன் திருதராஷ்டிரனை உவமித்துக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனாலும் இது புதியது

யானைபோல அளியது பிறிதுண்டா? உடல் பெரிது, தலையும் கொம்புகளும் செவிகளும் மூக்கும் அனைத்துமே பெரியவை. ஆகவே உவகையும் அச்சமும் ஐயமும் துயரமும் மிகப்பெரியவை. 

அதேபோல மண்ணுக்குள் மண்புழுக்களைப்போல அவர்கள் செத்து அழியவேண்டும் என அவர் சொல்வது மேலும் கூர்மையான வரி

செந்தில். ஆர்