ஜெ
இன்றைய வெண்முரசில் சார்வாக தரிசனத்தின் பஞ்சபேதம் என்னும் கொள்கையை வாசித்தேன்.நாத்திகவாதமே இத்தனை நுனுக்கமாக பேசப்பட்டிருப்பது ஆச்சரியம் அளித்தது. அவர்களுக்கும் பூர்வவேதவாதிகளுக்கும் வேதாந்திகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் துல்லியமாகக் காட்டியது.
இன்பம் மட்டுமே புருஷார்த்தம் என்று சார்வாக மரபு சொல்கிறது என படித்திருக்கிறேன். ஏன் அப்படிச் சொல்கிறது என இப்போது புரிந்தது. சுருக்கமான வரி. ஆனால் மிகத்தெளிவாக இருந்தது
மகேஷ்