பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
இளைய கௌவரவர்களுடன்,அபிமன்யூ அடிக்கும் 'கொட்டம்' தாங்கவொண்ணா சிரிப்பை வரவழைக்கிறது!.உற்சாகமான கட்டங்களில் உங்கள் எழுத்துக்களில் சர்வ சாதாரணமாக 'பகடிகள்' தெறித்து விழுகின்றன!.
"பன்றிக்குமேல் ஊனில்லை, விஷ்ணுவுக்குமேல் தெய்வமும் இல்லை” என்றான்."
"லட்சுமணன் கைகளைத் தூக்கி “ஏனென்றால் மாமனிதர்களைக் கண்டு தெய்வங்கள் அஞ்சுகின்றன. ஆகவே அவர்களுக்கு மேலும் திறன் கொண்ட மைந்தர்களை அளிக்கின்றன” என்றவன் உரக்க நகைத்து “அல்லது திறனே அற்ற மைந்தர்களை அளிக்கின்றன” என்றான்."
அன்புடன்,
அ .சேஷகிரி.