அன்புள்ள
ஜெ
நீர்க்கோலத்தின்
அமைப்பை ஆரம்பம் முதலே தொகுத்துக்கொண்டேன். அது சூரியனுடன் நிழலையும் ஒளியையும் பற்றி
உரையாடியவனுடன் ஆரம்பிக்கிறது. நிழலும் சூரியனின் சிருஷ்டியே என்கிறது. அதன்பின் பாண்டவர்கள்
உருமாறுவதுபற்றிய கதை. அதற்குள் தமயந்தியின் கதை. அத்தனை கதைகளுமே உருமாற்றத்தின் கதைகள்.
தமயந்தியும் நளனும் கதைகளுக்குள் வருகிறார்கள். ஆகவே மாயங்கள் வழியாக உருமாறுகிறார்கள்.
ஆனால் சம்பவனும் கஜனும் முக்தனும் சுபாஷிணியும்கூட உருமாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
அத்தனை உருமாற்றங்களையும் மேலும் உருமாறச்செய்கிறது கரவுக்காடு. உருமாற்றங்களின் பெரிய
ஒரு சிக்கலான சித்திரம் நீர்க்கோலம். நீரில் தெரியும் பிம்பங்கள் போல ஒருகணமும் நில்லாமல்
அலையடித்துக்கொண்டே இருக்கிறது
சிவக்குமார்