அன்புள்ள ஜெ
ஒவ்வொரு வெண்முரசு நாவல்இறுதியிலும் denouement என்ற ஒன்றுநிகழ்வதை மனம் எதிர்பார்க்கும்.நளனும் தமயந்தியும் உணர்ச்சிகரமாகஇணைவார்கள், அங்கிருந்தே அவன்வெற்றிகள் மீண்டும் தொடங்கும் என்றுஎதிர்பார்த்தேன். ஆனால் அந்த முதல்சந்திப்பு நேரடியாகசொல்லப்படவில்லை, அது ஆணுக்கும்பெண்ணுக்கும் என்றும் எஞ்சியுள்ள இடைவெளி, அதை சராசரிமனிதர்களால் கடக்க இயலாது என்றுதோன்றுகிறது. பிள்ளைகள் மூலம் அந்தஇடைவெளி ஒரளவு நிரப்பபடலாம்.
பீமனும் திரௌபதியும் தங்கள்பிள்ளைகளாக சம்பவனையும்சுபாஷிணியையும்விட்டுச்செல்கிறார்கள். பீமன்சம்பவனை மேலுலகுக்கு தன்னைகைதூக்கிவிட சொல்கிறான். கீழிருந்துஅனுப்பினாலும் மேலிருந்துகூப்பிட்டுக்கொண்டாலும்பிள்ளைதானே அதைச் செய்யமுடியும்?
சுபாஷிணி தன்னையேஜகன்மாதாவாக உணர்வது கவித்துவஉச்சம்.
மது