வெண்முரசு சென்னை யில் நடந்த விவாதங்கள்-பிப்ர &மார்ச் 2017
நான் இதற்கு ‘ஏகம்’ எனப் பெயரிடுள்ளேன். (விவாதத்திற்காககி)
சத்யவான்-சாவித்திரி . எமனை வென்ற பெண்ணின் கதையை நினைவு படுத்தித் தொடங்குகிறேன்.
கிராதையை கங்கை என்று சொல்வார்கள்.காட்டாளனாக சிவனைக் காட்டுகிறது கிராதம்.கிராதம் என்ற சொல் பொருள்படுவது முகரப்பட்டது எனவும் உணர்கிறேன்.(சப்த கோஷம்)
இங்குள்ள கேள்விஎது, யாரால், எதற்காக,ஏன், எவ்வாறு, எதனால்?
முகரப்பட்டது காலமா, செல்வமா, மழையா,பேரின்பமா,அத்தனை உயிரினமுமா,
அனைத்துமா?நேரடியாக ஆசிரியரை அணுகி பெறும் அறிவா அதனையும் கடந்து செல்லும்
விழைவா,தனக்கென இல்லாது மெய்ம்மையைத் தேடி,அந்தக் குறிக்கோள் ஒன்றே எனத்
தேரும் விசையா?