அன்புள்ள ஆசிரியருக்கு,
வெண்முரசில் வரும் உணவுகள் இன்னும் வழக்கத்தில் உள்ளனவா!!! இதுவரை வந்த பகுதியில் இருந்து யாரேனும் தொகுத்து உள்ளார்களா !!!
-திருமலை
அன்புள்ள
திருமலை
வெண்முரசில்
வரும் உணவுகள் பெரும்பாலும் ஏதேனும் வடிவில் இன்றும் உள்ளவை. அவை மிக எளிமையான சமையல்முறைகள்
என்பதைக் காணலாம். பெரும்பாலும் சுடுவது, அவிப்பது.நறுமணப்பொருட்கள் மிகக்குறைவு. கேரளச்சமையல்
எனக்கு அணுக்கமானது. நிறைய கல்யாணச்சமையல்களுக்குச் சென்ற அனுபவம் உண்டு. அதுதான் வெண்முரசில்
வருகிறது. இந்தியச்சமையலில் பிற்காலத்தில் இஸ்லாமியச்சமையலின் செல்வாக்கு அதிகம் –
மிகையான நறுமணப்பொருட்கள். கேரளச்சமையல் பழையபாணிச்சமையல் அதாவது கிட்டத்தட்ட மகாபாரதச்
சமையல். ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார், ‘என்னது சாப்பாடா மணமே காணும்” என்று
ஜெ