இந்தமாதம் நீர்க் கோலம். உங்களின் தீவிர வாசகர்கள்
அனைவருமே ஒரு நாவலைத் தொகுத்துக் கொள்வதில் வல்லவர்களே. மாரிராஜும் இதற்கு
விதிவிலக்கல்ல. நீர்க்கோலத்தை உருமாற்றம், கரவைக்காடு மற்றும் நளதமயந்தி என
அருமையாக பிரித்து மேய்ந்து விட்டார் மேய்ந்து.
அது
ஒரு உளவியல் மற்றும் stress management session போன்று தான் இருந்தது.
கூட்டம் முடிந்து சென்ற அனைவருக்கும் தங்களுடைய alter ego என்னவாக
இருக்கும் என்று ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் "நானே" தெரியாதவர்களுக்கு "மற்றொரு நானை" எப்படி கண்டுகொள்வது என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கும்.
நீர் ஒரு incompressible fluid. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதனை உள்வாங்கிக் கொண்டு தன் இயல்பை நீர் இழப்பதில்லை.
இது தான் நீர்க்கோலத்தினுடைய உருமாற்றத்தின் சாராம்சமாக தொகுத்துக் கொள்கிறேன்.
நம்முடைய
இயல்பான 'நானை' கண்டு கொள்ளும்போது வெளிப்புற அழுத்தத்தை நம்மால் எளிதாக
கடக்க முடிகிறது. "நீ நீயாக இரு" என்பதே நீர்க்கோலம் உணர்த்துவதாக
கொள்கிறேன்.
அதே
சமயத்தில் பாண்டவர்களுக்கு தங்களுடைய மற்றொரு 'நானை' கண்டுகொள்ள
உதவியதும் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை கொடுத்த அழுத்தமே. அழுத்தம்
மனச்சோர்வாக மாறுவதும் பெருந்திறப்பாக அமைவதும் அவரவர் ஆளுமையைப் பொறுத்ததே
என்ற ஒரு நிர்வாகப்பாடமாகவும் நீர்க்கோலம் அமைவதாக கருதுகிறேன்.
அன்புடன்
முத்து