ஜெ
வெண்முரசில் முக்கியமான ஒரு மாற்றம் கலி பிடிப்பது நளனை மட்டும் அல்ல என்பதுதான். நளனை கலி பிடிக்கிறது. கலியை அவன் வெல்கிறான். தமயந்தியையும் பிடிக்கிறது. அதேபோல புஷ்கரனையும் அந்த நாட்டையும் அத்தனைபேரையும் கலி பிடிக்கிறது. கலி அவ்வாறுதான் பிடிக்கமுடியும். ப்சுஹ்கரனைத்தான் அது உண்மையில் ஆட்டிப்படைக்கிறது. அவன் அதை மீறி எழுகிறான். கலி அவனைப் பிடிக்கும் காட்சி போலவே அவனைவிட்டு விலகும் காட்சியும் முக்கியமானது. அவனைப்பிடிக்கும் காட்சியில் அவன் கலியை காண்கிறான். விலகும் காட்சியில் அங்கே நிக்ழவதை சுதீரன் காண்கிறான்.
ஜெயராமன்